தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.
|
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019 |
அண்மைய நிகழ்வு தேனித் தமிழ்ச் சங்கத்திற்கு சிறந்த இலக்கிய அமைப்புக்கான விருது ![]() தேனி மாவட்டம், கம்பம் நகரில் இன்று (14-8-2022) மாலை நடைபெற்ற பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் ஐம்பெரும் விழாவில் தேனித் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட, சிறந்த இலக்கிய அமைப்பிற்கான விருதினைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் கூடலூர், திரு இரா. முருகேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார். இணைய வழி நிகழ்வுகள் - 150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து இணைய வழியில் நடத்திய நிகழ்வுகள் 150 என நிறைவுற்றது. இந்த இணைய வழி நிகழ்வைச் சிறப்பாக்கும் வழியில், 9-7-2022, சனிக்கிழமையன்று மாலை, தேனி, ஓட்டல் வெஸ்டர்ன் காட்ஸ், கூட்ட அரங்கில் நடைபெற்ற ‘இணைய வழி தமிழியல் உரைகள் - 150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் ‘முத்தமிழ்த்தேனீ விருது’ இருவருக்கும், ‘சொற்சுவைத் தேனீ விருது’ பதினைந்து பேராளர்களுக்கும், ‘தமிழ்ச்சேவைத் தேனீ விருது’ எழுவருக்கும், ‘தமிழ்ச்சுவைத் தேனீ விருது’ ஐவருக்கும் என 29 பேராளர்களுக்கு, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘தேனீ விருதுகள்’ வழங்கப்பட்டன. ![]() தேனி மாவட்டம் - தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தேனி மாவட்டத்திற்குப் புகழ் சேர்க்கும் வகையில் செயல்பட்டிருக்கின்றனர் / செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர்களில் அரசியல், திரைப்படம் போன்ற துறைகளைச் சேர்ந்த சிலர் மட்டுமேப் பலருக்கும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். பிற துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் பலர் உள்ளூரை விட்டு வெளியில் அறியப்படாதவர்களாகவே இருக்கின்றனர். அவர்களையெல்லாம் அனைவரும் தெரிந்து கொள்ளச் செய்திடவும், அவர்களின் சிறப்புகளை ஆவணப்படுத்திடவும் தேனித் தமிழ்ச் சங்கம் முன் வருகிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியலாளர்கள், திரைத்துறையினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள், சமூக சேவகர்கள் அல்லது தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் என்று கருதும் அனைவரையும் “தேனி மாவட்டம் - தெரிந்து கொள்ள வேண்டியவர்கள்” எனும் தலைப்பில் நூலாக்கம் செய்யும் பணியைத் தேனித் தமிழ்ச் சங்கம் தொடங்கியிருக்கிறது. “தேனி மாவட்டம் - தெரிந்து கொள்ள வேண்டியவர்கள்” எனும் நூலில் நூறு நபர்களைப் பற்றிய தகவல்கள் இடம் பெறும். மேலும் எண்ணிக்கை கூடுதலாகும் நிலையில், அடுத்து நூறு நபர்களுடன் தொகுதி 2 வெளியாகும். எண்ணிக்கை அதிகரிப்பிற்கேற்ப, தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். தேனி மாவட்டத்திலிருப்பவர்கள் அல்லது தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தாங்கள் அறிந்தவர்கள் குறித்தத் தகவல்களை ஏ-4 தாளில் நான்கு பக்கங்களுக்கு அதிகமின்றி வேர்டு கோப்பில் (MS Word) தமிழில் தட்டச்சு செய்து, கீழ்ப்பகுதியில் எழுதியவர் பெயர், முழு முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றையும் சேர்த்துத் தட்டச்சு செய்து, அந்தக் கோப்புடன், அவரது ஒளிப்படம் ஒன்றினையும் இணைத்து, thenitamilsangam@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இங்கு இடம் பெற வேண்டியவர்கள் குறித்தத் தகவல்களைப் பிறரே அனுப்பிட வேண்டும். தங்களைத் தாங்களாக முன்னிறுத்தி எழுதி அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். இந்நூலினைத் தொகுக்கும் தொகுப்பாசிரியர் குழுவினர் குறிப்பிட்ட நபர்களின் சிறப்புகளை ஆய்வு செய்து, அவர் தெரிந்து கொள்ள வேண்டியவர்தான் எனக் கருதும் நிலையில், அவரைப் பற்றிய தகவல்கள் நூலில் இடம் பெறும். இதில் தொகுப்பாசிரியர் குழுவின் முடிவே இறுதியானது. நூலில், தகவல் அளித்தவர் பெயரும் இடம் பெறும். தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் குறித்தத் தகவல்களை அனுப்பிடக் கடைசி நாள்: 31-8-2022. ![]() புரவலர் / புதிய உறுப்பினர் சேர்க்கை தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலைகள் சார்ந்த துறைகளில் வளர்ச்சியையும், செழுமையையும் இலக்காகக் கொண்டு பதிவு செய்யப் பெற்ற அமைப்பான தேனித் தமிழ்ச் சங்கத்தில் புரவலர் சேர்க்கை, புதிய உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் நிலை புதுப்பித்தல் போன்றவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கீழ்க்காணும் விண்ணப்பப் படிவங்களில் தேவையானதைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். * புரவலர் சேர்க்கை படிவம் * புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் * உறுப்பினர் நிலை புதுப்பித்தல் படிவம் ![]() |
© 2018-2022 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது ![]() முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com) (ISSN: 2454-1990) ![]() |