தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.
|
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019 |
சொற்சுவைத் தேனீ விருதாளர் |
![]() முனைவர் க. கலா காசிநாதன் சிவகங்கை மாவட்டம், கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இணைப்பேராசிரியர் மற்றும் கணினித்துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் க. கலா 1978 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நாளில் பிறந்தவர். கணினிப் பயன்பாடு பாடத்தில் முதுநிலை (M.C.A), ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மற்றும் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றவர். உதவிப்பேராசிரியர் பணிக்கான மாநிலத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். கல்வித்துறையில் 19 ஆண்டுகள் பணியாற்றி வரும் இவர் அழகப்பா பல்கலைக்கழகத் தேர்வுகளில் முதன்மைத் தேர்வாளராகவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தேர்வுகளில் கூடுதல் தேர்வாளராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலைத் தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். பன்னாட்டுத் தர நூலுக்கான எண்ணுடன் (ISBN) இவரது 3 நூல்கள் வெளியாகியிருக்கின்றன. பன்னாட்டுத் தரத் தொடர் எண் (ISSN) பெற்ற இதழ்களில் இவரது 15 ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. மரம் நடும் விழா, மருத்துவ முகாம்கள், பள்ளி மாணவர்களுக்கான தனித்திறன் மேம்பாட்டுத் திட்டம், இரத்ததான முகாம், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம், கொரோனா தொற்றுநோய் விழிப்புணர்வுத் திட்டம் போன்ற சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் இவர், 2008 ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மகளிர் அணிப் பொறுப்பாளராக இருந்து வருகிறார். மேலும் இவர், கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலத்தில், சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பெற்று மக்கள் பணியாற்றி இருக்கிறார். தற்போது காரைக்குடி நகர்மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பெற்று மக்கள் பணியாற்றி வருகிறார். இவருக்கு காரைக்குடி அரிமா சங்கம் ‘சிறந்த ஆசிரியர்’ விருது, காரைக்குடி கோவிலூர் மடாலயம், ‘சிறந்த பேராசிரியர் விருது’, கும்பகோணம், மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம் ‘பேராசிரியர் சிகரம்’, அமெரிக்க அறிஞர்கள் அமைப்பு ‘இளம் ஆய்வாளர் விருது’ போன்றவைகளை வழங்கிச் சிறப்பித்திருக்கின்றன. இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது. ![]() ![]() ![]() |
© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது ![]() முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com) (ISSN: 2454-1990) ![]() |