தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.
|
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019 |
சொற்சுவைத் தேனீ விருதாளர் |
![]() முனைவர் கிருபா நந்தினி கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியைச் சார்ந்த சு. வெங்கடாசலம் – வெ. வசந்தாமணி ஆகியோருக்கு 1987 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் மகளாகப் பிறந்த வெ. கிருபாநந்தினி, சிறு வயதிலிலருந்தே சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் வாழ வேண்டும் என்ற பெற்றோர்களின் வழி நடத்தலில் வளர்ந்தார். இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் பொழுது பல்வேறு கருத்தரங்குகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்ததன் விளைவாக ஆய்வு செய்ய முடிவு செய்தார். கடந்த பத்து ஆண்டுகளாக சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரவாற்று மையத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் பறவைகளின் இறப்பிற்கான காரணங்களையும், அவற்றிற்கு ஏற்படும் வாழ்விடச் சிக்கல்களில் ஒன்றான சுற்றுச்சூழல் மாசு பற்றி கண்டறியும் ஆய்வை மேற்கொண்டு அதில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தற்போது தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் வடூவூர் பறவைகள் சரணாயலத்தில் ஆய்வு செய்து வருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோயம்புத்தூர் மாவட்டத் துணைச் செயலாளராகவும், தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில அளவிலான மதிப்பீட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும், பூஞ்சோலை மற்றும் யாழிசைக் கல்வி சமூக அறக்கட்டளையின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இவரது ஆய்வுகள் குறித்த அனுபவங்களைப் பல்வேறு தளங்களில் எழுதியும் பேசியும் வருகிறார். இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது. ![]() ![]() ![]() |
© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது ![]() முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com) (ISSN: 2454-1990) ![]() |