தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.
|
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019 |
சொற்சுவைத் தேனீ விருதாளர் |
![]() மதிப்புறு முனைவர் ப. புதுராசா 1964 ஆம் ஆண்டு இறுதிவாக்கில் இந்திமொழி எதிர்ப்புப் பேராட்டம், தேனி மாவட்டம், கூடலூரில் உச்சமடைந்திருந்த வேளை காவல்துறையினரால் பல ஆண்கள் கைது செய்யப்பட்டும், பல ஆண்கள் கைதுக்குத் தப்பி வெளியூர்களுக்கும் இடம் பெயர்ந்திருந்த நாள் அது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆ, நள்ளிரவில் 12 மணிக்கு, கூடலூர் பரமத்தேவர் - ஜெயமணி அம்மாள் இணையர்களுக்கு மகனாகப் பிறந்தவர் ப. புதுராசா. ஊருக்குள் எந்த ராசாவும் இல்லாத நேரத்தில் பிறந்தவரென்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது. பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து, அரசியல் அறிவியல் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1986 ஆம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்பு, 1991 ஆம் ஆண்டில் இருந்து கூடலூரில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் ஒன்றினைத் தொடங்கி நடத்தி வருகின்றார். மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பு (FEDCOT)-ல் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு நுகர்வோர் ஒருங்கிணைப்புக் குழுவில் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். நுகர்வோருக்கு “விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வழிகாட்டுதல், வழக்காடுதல்” போன்ற சேவைகளைச் செய்து வருகின்றார். தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பெற்றிருக்கும் மாணவர் நுகர்வோர் மன்றங்களை ஒருங்கினைந்து வழி நடத்தி வருகின்றார். 1) நுகர்வோர் உரிமைகளும், கடமைகளும், 2) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 3) எடை அளவுகள் சட்டம், 4) தகவல் பெறும் உரிமைச் சட்டம், 5) உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 6) நேர்மையற்ற வணிக நடைமுறைகள், 7) நுகர்வுக் கலச்சாரத்தின் தாக்கங்களும் தீர்வுகளும், 8) கலப்படமும் கண்டறிதலும், 9) நுகர்வோர் தளத்தில் வழக்குகளும், தீர்வுகளும், 10) நுகர்வோர் விழிப்புணர்வும் தரமான வாழ்வும் என்பது போன்ற தலைப்புகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், பிற மாவட்டங்களிலும் உரை நிகழ்த்தி விழிப்புணர்வு பயிற்றுனராகவும் இருந்து வருகின்றார். மாணவ, மாணவியர், ஆசிரியர் மற்றும் பொதுமக்களின் நுகர்வோர் தொடர்பான ஆயிரத்துக்கும் அதிகமான புகார்களுக்குத் தீர்வுகள் கிடைக்கச் செய்துள்ளார். பழுதான தொலைக்காட்சிக்குப் பதிலாக புதிய தொலைக்காட்சி, மருத்துவசேவையில் ஏற்பட்ட கவனக்குறைவுக்கு நஷ்டஈடு, சாயம் போன பட்டுச் சேலைக்குப் புதிய சேலை, குறைபாடுடைய அலைபேசிக்கு மாற்றாகப் புது அலைபேசி என்று 35-க்கும் அதிகமான நுகர்வோர் வழக்குகளை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடுத்து, அதன் மூலம் தீர்வு கிடைக்கச் செய்துள்ளார். 2006 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தேனி மாவட்டத்தில் சிறந்த நுகர்வோர் சேவைக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை 12 முறை மாவட்ட ஆட்சியர்களிடம் பெற்றுள்ளார். நுகர்வோர் பாதுகாப்புக்கான மாநில அளவிலான சிறந்த ஒருங்கிணைப்பாளர் விருது (2006 - 2007), மாநில அளவில் சிறந்த நுகர்வோர் மன்ற வழிகாட்டுதலுக்கான விருது (2012), மாநில அளவிலான தனி நபர் நுகர்வோர் சேவைக்கான விருது (2016), சிறந்த சேவைக்கான நேதாஜி விருது விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சேவைச் செம்மல் விருது, சிறந்த சமூக சேவை விருது உள்ளிட்ட 17 விருதுகளைப் பெற்றுள்ளார். அமெரிக்காவிலிருக்கும் உலகத்தமிழ் பல்கலைக்கழகம், இவரது சமூக சேவையைப் பாராட்டி, இவருக்கு ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புடைய இவருக்கு தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது. ![]() ![]() ![]() |
© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது ![]() முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com) (ISSN: 2454-1990) ![]() |