TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - நிகழ்வுகள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

விழா மற்றும் நிகழ்வுகள்

2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருது பெற்ற
தேனித் தமிழ்ச் சங்கத்தின் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி
அவர்களுக்கான பாராட்டு விழா! (14-02-2025)

புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம்
தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு அரசின் சிங்கார வேலர் விருது பெற்ற எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்குப் பாராட்டு விழாக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குச் சங்கத்தின் தலைவர் சு.சி. பொன்முடி தலைமை தாங்கினார். சங்கத்தின் துணைத்தலைவர் க. பாண்டியராசன், துணைச்செயலாளர் இரா. முருகேசன், பொருளாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் முனைவர் தி. நெடுஞ்செழியன், புலவர் மு. ராஜரத்தினம், கவிஞர் பே. ராஜேந்திரன், முனைவர் அ. சந்திரபுஷ்பம், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பெ. இளங்கோ, தேனி சீருடையான், கவிஞர் வதிலை பிரபா, முனைவர் ஜெ. விஜயதுரை, முனைவர் அ. ரவீந்திரநாத் நேரு, முனைவர் அ. காமாட்சி, மு. அன்புக்கரசன், வழக்கறிஞர் மணி கார்த்திக், புலவர் ச. ந. இளங்குமரன், கவிஞர் ம. கவிக்கருப்பையா, முனைவர் ஜா. ஜீலிபிரதிபா, டாக்டர் சீனிப்பாண்டியன், முனைவர் அப்துல்காதர், வே. சிதம்பரம், கவிஞர் பாண்டிய மகிழன், விடியல் வீரா, நீலபாண்டியன், ஆ. முத்துக்குமார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பாலு, செல்லச்சாமி உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் கலந்து கொண்டு சிங்காரவேலர் விருதாளரை வாழ்த்திப் பேசினர். சிங்காரவேலர் விருதாளரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளருமான எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி ஏற்புரை வழங்கினார். காரைக்குடி சிவாச்சாரியார் பழ. பாஸ்கரன் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார். முன்னதாக, கவிஞர் மகேஸ்வரி வெற்றி வரவேற்புரை வழங்கினார். முடிவில் முத்துவிஜயன் நன்றி தெரிவித்தார். காய்கனிச் சிற்பக் கலைஞர் மு. இளஞ்செழியன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் கருமாத்தூர், அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறை
இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம் (12-3-2024)

புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம்
மதுரை மாவட்டம், கருமாத்தூர், அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறைக்கும், தேனித் தமிழ்ச் சங்கத்திற்கும் இடையிலான கல்வி மற்றும் கலை, இலக்கியம், பண்பாடு ஆராய்ச்சி சார் பரிமாற்றங்கள், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான, புரிந்துணர்வு அடிப்படையிலான ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்வு, 12-3-2024, செவ்வாய்க்கிழமை, காலை 10.00 மணிக்கு கல்லூரி முதல்வர் அறையில் நடைபெற்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரியின் சார்பில், கல்லூரி முதல்வர் அருள்தந்தை ம. அன்பரசு மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஞா. குருசாமி ஆகியோரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தலைவர் சு. சி. பொன்முடி மற்றும் செயலாளர் தேனி மு. சுப்பிரமணி ஆகியோர் கையொப்பமிட்டனர். அதன் பின்னர், ஆவணங்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்திய
இணைய வழி தமிழ் உரைகள் 150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா (09-07-2022)

புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம்
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து இணைய வழியில் நடத்தி வந்த 150 உரை நிகழ்வுகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, அதன் நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா தேனியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளி சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். தேனித் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மு. சுப்பிரமணி, செயலாளர் சு. சி. பொன்முடி, பொருளாளர் அ. முகமது பாட்சா, அ. பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச்செயலாளர் மு. ரேணுகாதேவி வரவேற்புரையாற்றினார். திண்டுக்கல், ஆர்.வி.எஸ் கல்விக் குழும இயக்குநர் முனைவர் வை. கிருஷ்ணகுமார் பாராட்டுரையும், தேனி கம்மவார் சங்கப் பொதுப்பள்ளியின் செயலாளர் சேதுராஜன் வாசு வாழ்த்துரையும் வழங்கினார். இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் சிறப்பு விருந்தினாராகக் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பெற்ற விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினார். இவ்விழாவில் முத்தமிழ்த் தேனீ விருது 2 பேர்களுக்கும் சொற்சுவைத் தேனீ விருது 15 பேர்களுக்கும், தமிழ்ச்சேவைத் தேனீ விருது 7 பேர்களுக்கும், தமிழ்ச்சுவைத் தேனீ விருது 5 பேர்களுக்கும் என்று மொத்தம் 29 விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு அரசு விருது பெற்ற நான்கு தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றனர். காய்கனிச் சிற்பக் கலைஞர் மு. இளஞ்செழியன், தர்ப்பூசனியில் துணைவேந்தர் உருவம் பொறித்த காய்கனிச் சிற்பத்தினைப் பரிசாக அளித்தார். முடிவில் துணைச்செயலாளர் இரா. முருகேசன் நன்றி கூறினார்.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் பெரம்பலூர், சீனிவாசன் கலை மற்றும அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை
இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம் (28-4-2022)

புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம்
பெரம்பலூர், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் 28-4-2022, வியாழக்கிழமை, காலை 10.00 மணிக்கு நடைபெற்ற, பைந்தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா, பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, புரிந்துணர்வு ஒப்பந்தம் விழா எனும் மூன்று விழாக்களை உள்ளடக்கிய முப்பெரும் விழா நிகழ்விற்குத் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் மரியாதைக்குரிய அ. சீனிவாசன் அவர்கள் தலைமை வகித்தார். இவ்விழாவில் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைக்கும், தேனித் தமிழ்ச் சங்கத்திற்கும் இடையிலான கல்வி மற்றும் கலை, இலக்கியம், பண்பாடு ஆராய்ச்சி சார் பரிமாற்றங்கள், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான, புரிந்துணர்வு அடிப்படையிலான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரியின் சார்பில், கல்லூரி முதல்வர் முனைவர் நா. வெற்றிவேலன் அவர்களும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தலைவர் தேனி மு. சுப்பிரமணி மற்றும் செயலாளர் சு. சி. பொன்முடி ஆகியோர் கையொப்பமிட்டனர். அதன் பின்னர், ஆவணங்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கம், சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம், பிரான்சு முத்தமிழ்ச் சங்கம் மற்றும்
உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தமிழ்த்துறை இணைந்து நடத்திய
“பாவேந்தரின் கவிதைக்களமும் கருத்துப் புலப்பாடும்” எனும் பன்னாட்டுக் கருத்தரங்கம் (7-4-2022)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கம்
உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை, பிரான்சு முத்தமிழ்ச் சங்கம், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து பாவேந்தர் பாரதிதாசன் 130வது பிறந்தநாள் சிறப்பு நிகழ்வாக, 7-4-2022, வியாழக்கிழமையன்று காலை 10.00 மணிக்கு கல்லூரியின் நிறுவனர் நினைவரங்கத்தில், “பாவேந்தரின் கவிதைக்களமும் கருத்துப் புலப்பாடும்” எனும் பொருண்மையிலான இணைய வழியிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தின. கல்லூரியின் நிறுவனர் நினைவரங்கத்தில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்கள் தலைமையேற்று பன்னாட்டுக் கருத்தரங்க நிகழ்வினைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர், சு.சி.பொன்முடி, தலைவர் தேனி மு. சுப்பிரமணி, கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மு. அப்துல்காதர், தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் இரா. முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் பிரான்சு முத்தமிழ்ச் சங்கம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு ஆவணப் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது. கல்லூரியின் சார்பில் முதல்வர் ஹாஜி தர்வேஷ் முகைதீன் அவர்களும், பிரான்சு முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர், ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் முத்துவிஜயன் அவர்களும் ஆவணங்களைப் பெற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, “பாவேந்தரின் கவிதைக்களமும் கருத்துப் புலப்பாடும்” எனும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் இணைய வழியில் நடைபெற்றது. (நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தமிழ்த்துறை இணைந்து நடத்திய
“திராவிட மொழிகளின் சிறப்புகள்” எனும் தேசியக் கருத்தரங்கம் (22-2-2021)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் தேசியக் கருத்தரங்கம்
உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை, தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி, சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து உலகத் தாய்மொழி நாள் சிறப்பு நிகழ்வாக, 22-2-2021 திங்கள் கிழமையன்று காலை 10.00 மணிக்கு கல்லூரியின் நிறுவனர் நினைவரங்கத்தில், திராவிட மொழிகளின் சிறப்புகள் எனும் பொருண்மையிலான இணைய வழியிலான தேசியக் கருத்தரங்கத்தினை நடத்தின. கல்லூரியின் நிறுவனர் நினைவரங்கத்தில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்விற்கு உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி (தன்னாட்சி) செயலாளர் மற்றும் தாளாளர் ஹாஜி தர்வேஷ் முகைதீன் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் ஆட்சிமன்றக் குழுத்தலைவர் ஜனாப் எஸ். செந்தால் மீரான் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ஹாஜி முனைவர் ஹெச். முகமது மீரான் அவர்கள் தொடக்க உரையாற்றினார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. முருகன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி, கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மு. அப்துல்காதர், தேனித் தமிழ்ச் சங்கத்தின் நிருவாகக்குழு உறுப்பினர் பெரியகுளம், நேசம் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம்’ (22-2-2020)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் 5 தொடக்க விழா
தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் நிகழ்வின் ஐந்தாம் அமர்வுத் தொடக்க விழா தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், செயலாளர் சு.சி.பொன்முடி, துணைச்செயலாளர் மு. ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. திருச்சி, புனித வளனார் கல்லூரித் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் (பணி நிறைவு) மற்றும் திருச்சி, சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் கவியரங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் முனைவர் ரா. நாகேந்திரன் அவர்களது தலைமையில் 30 கவிஞர்கள் பங்கேற்ற ‘இனி (ய) தமிழ் மொழியே...!’ எனும் தலைப்பிலான கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகளிலிருந்து மூன்று பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.500/-, இரண்டாம் பரிசாக ரூ.300/- மூன்றாம் பரிசாக ரூ.200/- மதிப்பிலான புத்தகப் பரிசினையும் பாராட்டுச் சான்றிதழையும், கவியரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழையும் மாவட்ட நூலகராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்ற மதுரை, கவிஞர் ந. பாண்டுரங்கன் அவர்கள் வழங்கினார். முன்னதாகச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் போ. சிதம்பரம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கவியரங்கத் துணை ஒருங்கிணைப்பாளர் பூ. ஆனந்தகுமார் நன்றியுரையாற்றினார்.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம்’ (25-1-2020)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் 4 தொடக்க விழா
தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் நிகழ்வின் நான்காம் அமர்வுத் தொடக்க விழா தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், செயலாளர் சு.சி.பொன்முடி,துணைச்செயலாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. அப்துல்சமது அவர்கள் கவியரங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் தமிழாசிரியர் கி. யாகதேவன் அவர்களது தலைமையில் 29 கவிஞர்கள் பங்கேற்ற ‘அன்றும் இன்றும்’ எனும் தலைப்பிலான கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகளிலிருந்து மூன்று பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.500/-, இரண்டாம் பரிசாக ரூ.300/- மூன்றாம் பரிசாக ரூ.200/- மதிப்பிலான புத்தகப் பரிசினையும் பாராட்டுச் சான்றிதழையும், கவியரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழையும் பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர், முனைவர் கவிஞர் மீனா சுந்தர் அவர்கள் வழங்கினார். முன்னதாகச் சங்கத்தின் பொருளாளர் கவிஞர் ம. கவிக்கருப்பையா அவர்கள் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் துணைச் செயலாளரும், கவியரங்க ஒருங்கிணைப்பாளருமான மு. ரேணுகாதேவி நன்றியுரையாற்றினார்.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம்’ (21-12-2019)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் 3 தொடக்க விழா
தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் நிகழ்வின் மூன்றாம் அமர்வுத் தொடக்க விழா தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், செயலாளர் சு.சி.பொன்முடி, பொருளாளர் ம. கவிக்கருப்பையா மற்றும் துணைச்செயலாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடிகள் துறைத் தலைவர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் த. கண்ணன் அவர்கள் கவியரங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் கவிஞர் கு. சுவாதி அவர்களது தலைமையில் 30 கவிஞர்கள் பங்கேற்ற ‘மார்கழிக் கோலங்கள்’ எனும் தலைப்பிலான கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகளிலிருந்து மூன்று பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.500/-, இரண்டாம் பரிசாக ரூ.300/- மூன்றாம் பரிசாக ரூ.200/- மதிப்பிலான புத்தகப் பரிசினையும் பாராட்டுச் சான்றிதழையும், கவியரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழையும் வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகத்தின் பதிப்பாளரும், மகாகவி மாத இதழின் ஆசிரியருமான கவிஞர் வதிலை பிரபா அவர்கள் வழங்கினார். முன்னதாக சங்கத்தின் துணைச்செயலாளரும், கவியரங்க ஒருங்கிணைப்பாளருமான மு. ரேணுகாதேவி வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் உறுப்பினர் கூடலூர் இரா. முருகேசன் நன்றி கூறினார்.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம்’ (23-11-2019)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - 2 கவியரங்கம் தொடக்க விழா
தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் நிகழ்வின் இரண்டாம் அமர்வுத் தொடக்க விழா தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், செயலாளர் சு.சி.பொன்முடி, பொருளாளர் ம. கவிக்கருப்பையா மற்றும் துணைச்செயலாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. திருநெல்வேலி, பொதிகைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செம்மல் பே.ராஜேந்திரன் அவர்கள் கவியரங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் மா. துரை (எ) கவிஞர் மதுரன் அவர்களது தலைமையில் 36 கவிஞர்கள் பங்கேற்ற ‘முதுமையைப் போற்றுவோம்’ எனும் தலைப்பிலான கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகளிலிருந்து மூன்று பரிசுக்குரிய கவிதைகளை மதுரை கவிஞர் இளவல் ஹரிஹரன் அவர்கள் தேர்வு செய்திருந்தார். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல் பரிசாக ரூ.500/-, இரண்டாம் பரிசாக ரூ.300/- மூன்றாம் பரிசாக ரூ.200/- மதிப்பிலான புத்தகப் பரிசினையும் பாராட்டுச் சான்றிதழையும், கவியரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழையும் திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பே. ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார். முன்னதாக கவியரங்கத் துணை ஒருங்கிணைப்பாளர் பூ. ஆனந்தகுமார் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் துணைச்செயலாளரும், கவியரங்க ஒருங்கிணைப்பாளருமான மு. ரேணுகாதேவி நன்றி கூறினார்.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தமிழ்த்துறை
இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம் (23-10-2019)

புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றம்
தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியிலுள்ள கல்லூரி நிறுவனர் நினைவரங்கில் 23-10-2019, புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு நடைபெற்ற கம்பம் பள்ளத்தாக்கு இலக்கியக் காப்பகம் (Centre for the Preservation of Cumbum Valley Literatures) தொடக்க விழா நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் ஹாஜி. முனைவர் எச். முகமது மீரான் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் ஜனாப். எஸ். செந்தல் மீரான், கல்லூரியின் செயலாளர் & தாளாளர் ஹாஜி எம். தர்வேஷ் முகைதீன், தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மு. அப்துல்காதர் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி தமிழ்த்துறைக்கும், தேனித் தமிழ்ச் சங்கத்திற்கும் இடையிலான கல்வி மற்றும் கலை, இலக்கியம், பண்பாடு ஆராய்ச்சி சார் பரிமாற்றங்கள், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான, புரிந்துணர்வு அடிப்படையிலான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதற்கான ஆவணங்களைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மு.அ. சமது மற்றும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி ஆகியோர் பரிமாற்றம் செய்து கொண்டனர். தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சு.சி. பொன்முடி தொடக்க உரையாற்றினார்.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம்’ (19-10-2019)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் 1 தொடக்க விழா
தேனித் தமிழ்ச் சங்கத்தின் ‘தேன் துளிகள் - கவியரங்கம் முதல் அமர்வின் தொடக்க விழா தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், செயலாளர் சு.சி.பொன்முடி மற்றும் துணைச்செயலாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மூத்தத் தமிழறிஞர் தமிழ்ச்செம்மல் தமிழ்ப் பெரியசாமி அவர்கள் கவியரங்கத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் கவிஞர் ம. கவிக்கருப்பையா அவர்களது தலைமையில் 40 கவிஞர்கள் பங்கேற்ற ‘வசந்த விடியல்’ எனும் தலைப்பிலான கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதைகளிலிருந்து மூன்று பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.500/-, இரண்டாம் பரிசாக ரூ.300/- மூன்றாம் பரிசாக ரூ.200/- மதிப்பிலான புத்தகப் பரிசினையும் பாராட்டுச் சான்றிதழையும், கவியரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழையும் கவிஞர் சக்தி ஜோதி அவர்கள் வழங்கினார். முன்னதாகச் சங்கத்தின் துணைச்செயலாளரும், கவியரங்க ஒருங்கிணைப்பாளருமான மு. ரேணுகாதேவி வரவேற்புரையாற்றினார். கவியரங்கத் துணை ஒருங்கிணைப்பாளர் பூ. ஆனந்தகுமார் நன்றி கூறினார்.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கான‘உறுப்பினர் அட்டை வழங்கும் விழா’ (1-6-2019)

தேனித் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா, தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. துணைச்செயலாளர் மு. ரேணுகாதேவி வரவேற்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சு.சி. பொன்முடி, துணைச்செயலாளர் அ, முகமது பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் ‘தமிழ்ச்செம்மல்’ கவிஞர் வதிலை பிரபா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உறுப்பினர்களுக்கான அட்டையினை வழங்கிச் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் பொருளாளர் கவிஞர் ம. கவிக்கருப்பையா நன்றி கூறினார். (நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


உத்தமபாளையம், ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூரியில்
‘உலக மகளிர் நாள் விழா’ (8-3-2019)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் உலக மகளிர் நாள் விழா
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் உத்தமபாளையம் ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூரி இணைந்து, கல்லூரிக் கூட்ட அரங்கில் ‘உலக மகளிர் நாள் விழா’வினை நடத்தின. இவ்விழாவிற்குக் கல்லூரியின் செயலாளர் இந்திரா உதயக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெ. மகாலட்சுமி வரவேற்புரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் மு. ரேணுகாதேவி நிகழ்வு குறித்த அறிமுக உரையாற்றினார். தேனித் தமிழ்ச் சங்க உறுப்பினர் மு.சு. முத்துக்கமலம், ஸ்ரீ விகாசா வித்யாலயா பள்ளி ஆசிரியரை அ. நசீபா மற்றும் ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூரி, உதவிப் பேராசிரியர் அ. கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் மதுரை, ரசிய மொழிப் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கிராவட்ஸ் ஜோயா விளாடிமிர் ரொவ்னா மற்றும் ஞானவாணி பண்பலை வானொலி அறிவிப்பாளர் முனைவர் பி. வித்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாணவி பா. ஜெயஸ்ரீ நன்றி கூறினார். (நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


வீரபாண்டி, தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
‘இணையத்தில் தமிழ்’ ஒருநாள் தேசியப் பயிலரங்கம் (21-2-2019)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ஒருநாள் தேசியப் பயிலரங்கம்
தேனித் தமிழ்ச் சங்கம், தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழியற்புலம், தமிழியல் துறை ஆகியவை இணைந்து, உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு, கல்லூரி மாணவர்கள் பயன் பெறும் வகையில் “இணையத்தில் தமிழ்” என்னும் பொருளில் ஒரு நாள் (21-2-2019) தேசியப் பயிலரங்கத்தினை நடத்தியது.. இப்பயிலரங்கினை மதுரை காமராசர் பல்கலைக்கழக உள்தர உத்தரவாத மைய இயக்குநர் முனைவர் க. பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். தொழில்நுட்ப அமர்வில், திருச்சிராப்பள்ளி, இணையத் தமிழ் வளர்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் தி. நெடுஞ்செழியன், தமிழ் எழுத்துருக்கள்’ எனும் தலைப்பிலும், திருச்சி, நவலூர்குட்டப்பட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் துரை. மணிகண்டன், ‘தமிழ் வலைப்பூக்கள்’ எனும் தலைப்பிலும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி, ‘தமிழ் மின்னிதழ்கள்’ எனும் தலைப்பிலும், காந்திகிராமக் கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், முனைவர் சி. சிதம்பரம், ‘தமிழ் மின்னூல்கள்’ எனும் தலைப்பிலும் பயிற்சியளித்தனர். பயிற்சியின் நிறைவில் பங்கேற்ற மாணவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவர் முனைவர் போ. சத்தியமூர்த்தி சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். பயிலரங்கில் தேனித் தமிழ்ச் சங்கச் செயலாளர் சு.சி. பொன்முடி, பொருளாளர் ம. கவிக்கருப்பையா, துணைச் செயலாளர் அ. முகமது பாட்சா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் நாகேந்திரன் வரவேற்புரையும், முடிவில் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மு. ரேணுகாதேவி நன்றியுரையும் வழங்கினர். (நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழியல் துறையில்
‘ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்’ இரு நாள் தேசியப் பயிலரங்கம் (2-2-2019 & 3-2-2019)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் இரு நாள் தேசியப் பயிலரங்கம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழியற்புலம், தமிழியல் துறை ஒருங்கிணைப்பில், மதுரை காமராசர் பல்கலைக்கழக உள்தர உத்தரவாத மையம், கச்சியப்ப முனிவர் தமிழியல் கல்லூரி (முசிறி), அமெரிக்கா, ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை மற்றும் தேனித் தமிழ்ச் சங்கம் இணைந்து முதுகலை, ஆய்வியல் நிறைஞர்,முனைவர்ப் பட்ட மாணவர்கள் மற்றும் முனைவர்ப் பட்ட மேலாய்வாளர்கள் ஆய்வுத் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் “ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும்” என்னும் பொருளில் இரண்டு நாள் (2-2-2019 & 3-2-2019) தேசியப் பயிலரங்கத்தினை நடத்தியது.. இவ்விழாவின் தொடக்க நிகழ்விற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தலைவர் முனைவர் வை. இராமராசபாண்டியன் தலைமை வகித்தார். பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவரும், பயிலரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் போ. சத்தியமூர்த்தி வரவேற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழக உள்தர உத்தரவாத மையத் துணை இயக்குநர் பேராசிரியர் முனைவர் செ. முருகேசன் பயிலரங்க அறிமுகவுரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறைத் தலைவரும், கச்சியப்ப முனிவர் தமிழியல் கல்லூரி முதல்வருமான பேராசிரியர் அரு. மருததுரை பயிலரங்கைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். பயிலரங்கில் அமெரிக்கா, ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழாய்வு இருக்கையின் இயக்குனர் திரு. பிரபுரங்கராசு, மலேசியா பினாங்கு மாநிலக் காவல் ஆய்வாளர்கள் அருள் பிரகாஷ் பாலகிருஷ்ணன், லோகநாதன்கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி, பொருளாளர் கவிஞர் ம. கவிக்கருப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். (நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


உத்தமபாளையம் ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூரியில்
‘மின்வழித் தமிழ் கற்றல்-கற்பித்தல்’ ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கம்(1-11-2018)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கம்
தேனித் தமிழ்ச் சங்கம், தமிழ் அநிதம் (அமெரிக்கா) மற்றும் உத்தமபாளையம் ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூரி இணைந்து 1-11-2018 அன்று ‘மின்வழித் தமிழ் கற்றல்-கற்பித்தல்’ ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கத்தை நடத்தின. இப்பயிலரங்கத் தொடக்க விழா நிகழ்வுக்குக் கல்லூரியின் தாளாளர் நல்லாசிரியை இந்திரா உதயக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெ. மகாலட்சுமி வரவேற்றார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி, துணைச் செயலாளர் அ. முகமது பாட்சா, கல்லூரி உதவிப் பேராசிரியர் பா. சசிக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் மற்றும் தொடர்பியல் புலத்தின் மேனாள் தலைவரும், மொழியியல் துறையின் தகைசால் பேராசிரியருமான முனைவர் வே. ரேணுகாதேவி அவர்கள் பயிலரங்கினைத் தொடங்கி வைத்து, அதே தலைப்பில் பயிற்சியுமளித்தார். அவரைத் தொடர்ந்து, திரு. ஜனார்த்தனம் (நிருவாக இயக்குநர், டிக் சாப்ட்ஸ், மதுரை) அவர்கள் ‘கற்பித்தலுக்கான செயலிகள்’ (Teaching Apps) எனும் தலைப்பிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மையத்தின் பேராசிரியர் (பணி நிறைவு) முனைவர் அ. காமாட்சி அவர்கள் ‘மின்வழிக் கற்றல் மூலம் எளிமையாகத் தமிழ் கற்பித்தல்’ (Tamil Teaching Made Easy by E-Learning) எனும் தலைப்பிலும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி அவர்கள் ‘இணையத்தில் இன்பத்தமிழ் கற்றல்’(Inbatamil Learning in Internet) எனும் தலைப்பிலும், தமிழ் அநிதம் (அமெரிக்கா) நிறுவனரும், தலைவருமான சுகந்தி நாடார் அவர்கள் அமெரிக்காவிலிருந்து, ‘தொழில்நுட்பங்களும் தமிழ்ப் பாடங்கள் தயாரிப்பும்’ (Technologies and Tamil Lessons Preparation) எனும் தலைப்பில் காணொலிக் காட்சி வழியாகவும், சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிரலாளர், எஸ். கார்த்திகேயன் அவர்கள் ‘மின்வழிக் கற்றலில் செம்மொழித் தமிழ்’ (E-Learning in Classical Tamil) எனும் தலைப்பிலும் பயிற்சியளித்தனர். மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கா. உமாராஜ் அவர்கள் நிறைவு விழா உரையும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் சு.சி.பொன்முடி, பொருளாளர் கவிஞர் ம. கவிக்கருப்பையா ஆகியோரும் உரையாற்றினர். கல்லூரி உதவிப் பேராசிரியர் ம. விக்னேஷ்குமார் நன்றி தெரிவித்தார். (நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கத்தின் சிலம்பு மற்றும் காந்தியப் பெருவிழா (02-10-2018)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்
தேனித் தமிழ்ச் சங்கத்தின் சிலம்பு மற்றும் காந்தியப் பெருவிழா, தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், பொருளாளர் கவிஞர் ம. கவிக்கருப்பையா, துணைச்செயலாளர்கள் அ. முகமது பாட்சா, மருத்துவர் மு. பிரீத்தா நிலா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் புதிய உறுப்பினர்களுக்குப் பயனாடை அணிவித்து வரவேற்பு செய்து சிறப்பிக்கப்பட்டது. விழாவில் தேனி மாவட்டம், கூடலூர், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளைத் தலைவர் திரு தமிழாதன் அவர்கள், தேனி மாவட்டச் சர்வோதயா மண்டலத் துணைத்தலைவரும், காந்தீயக் கொள்கையாளருமான திரு அ. சேதுபதி அவர்கள் மற்றும் உத்தமபாளையம், ஸ்ரீ விகாசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் திருதி இந்திரா உதயக்குமார் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டனர். தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநரும், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தனி அலுவலருமான முனைவர் க. பசும்பொன் அவர்கள் பேராளர்களைப் பாராட்டிச் சிறப்புரையாற்றினார். உதகை, கவிஞர் டி. வாக்கிங் அவர்கள் நிகழ்வுச் சிறப்புரையாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத்தலைவர் முனைவர் போ. சத்தியமூர்த்தி, மொழியியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கா. உமாராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாராட்டு பெற்ற திரு தமிழாதன் மற்றும் திரு அ. சேதுபதி ஆகியோர் ஏற்புரை வழங்கினர். முன்னதாகச் சங்கத்தின் செயலாளர் சு.சி. பொன்முடி வரவேற்புரையும், நிறைவாக, சங்கத்தின் துணைத்தலைவர் ந.வீ.வீ. இளங்கோ அவர்கள் நன்றியுரையும் வழங்கினர்.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் (02-09-2018)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்
தேனித் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில் செயலாளர் சு.சி. பொன்முடி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்டோபர் 2 ஆம் நாளில் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கு வரவேற்பு செய்வது, காந்தீயக் கொள்கையாளருக்குப் பாராட்டிச் சிறப்பிப்பது உள்ளிட்ட இரண்டாவது விழாவினை நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் பொருளாளர் ம. கவிக்கருப்பையா, துணைத்தலைவர் ந.வீ.வீ. இளங்கோ, துணைச் செயலாளர்கள் மருத்துவர் மு. பிரீத்தா நிலா, அ. முகமது பாட்சா ஆகியோரும் நிருவாகக்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், புதிதாகச் சேர்ந்த உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


கேரளா (மூணாறு, நல்லதண்ணி எஸ்டேட்) வெள்ளப்பாதிப்புப் பகுதியில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் (26-08-2018)

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
கற்றல் இனிது வாழ்வியல் பள்ளி மற்றும் தேனித் தமிழ்ச் சங்கம் இணைந்து 26-08-2018, ஞாயிற்றுக்கிழமை அன்று, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு, நல்லதண்ணி எஸ்டேட் பகுதியில் மருத்துவர் எஸ். முருகேசன் அவர்களது தலைமையிலான ஆறு மருத்துவர்கள் உள்ளிட்ட 15 நபர்கள் கொண்ட குழுவின் மூலம் 300க்கும் அதிகமானவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து, இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கற்றல் இனிது வாழ்வியல் பள்ளியின் சார்பில் மருத்துவர் மு. பிரீத்தா நிலா (துணைச் செயலாளர், தேனித் தமிழ்ச் சங்கம்) மற்றும் மருத்துவர் எஸ். முருகேசன் ஆகியோரும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தலைவர் தேனி மு. சுப்பிரமணி, பொருளாளர் கவிஞர் ம. கவிக்கருப்பையா, துணைச் செயலாளர் அ. முகமது பாட்சா, உறுப்பினர் எம். கணேஷ் (விகடன் செய்தியாளர்) மற்றும் உறுப்பினர் தீர்க்கதரிசனன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட கேரள மாநிலம், தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜேந்திரன் அவர்கள் கற்றல் இனிது வாழ்வியல் பள்ளி மற்றும் தேனித் தமிழ்ச் சங்கம் அமைப்புகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


உத்தமபாளையம், விகாசா கல்வி நிறுவனங்களில் விடுதலை நாள் மற்றும் யானைகள் நாள் விழா (15-08-2018)

உத்தமபாளையம், விகாசா பள்ளியில் சிரிப்பு யோகா
15-08-2018 அன்று, தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஸ்ரீ விகாசா வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் இந்திரா உதயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற 72வது சுதந்திர தின விழாவில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் துணைச்செயலாளர் மருத்துவர் பிரீத்தா நிலா அவர்களும், ஸ்ரீ விகாசா கல்வியியல் கல்லூரியில் தமிழ் உலகம் அறக்கட்டளையின் ஆலோசகர் திரு. ஆல்பர்ட் பெர்னாண்டோ (விஸ்கான்சின், அமெரிக்கா) அவர்களும் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து, உத்தமபாளையம், ஸ்ரீ விகாசா வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில், தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் கற்றல் இனிது வாழ்வியல் பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய ‘யானைகள் நாள் கொண்டாட்டம்’ நடைபெற்றது. இந்நிகழ்வில் யானைகளின் வாழ்வுகள் குறித்த பல்வேறு தகவல்களை விளக்கும் கருத்துரைகளை தமிழ் உலகம் அறக்கட்டளையின் ஆலோசகர் ஆல்பர்ட் பெர்னான்டோ, தேனித் தமிழ்ச் சங்கப் பொருளாளர் ம. கவிக்கருப்பையா மற்றும் விகடன் குழுமச் செய்தியாளர் எம். கணேஷ் ஆகியோர் வழங்கினர். இவ்விழாவில் நூற்றுக்கும் அதிகமான யானை குறித்த ஒளிப்படங்கள் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வின் முடிவில் ஒளிப்படக்கலைஞர் அருண் அவர்களது ‘யானைகளின் குறிப்புகள்’ (யானைகளின் சைகைகள்) எனும் ஆவணப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்பெற்றது. இவ்விழாவில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி, துணைச் செயலாளர் மருத்துவர் பிரீத்தா நிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


உத்தமபாளையம், விகாசா பள்ளியில் சிரிப்பு யோகா (04-07-2018)

உத்தமபாளையம், விகாசா பள்ளியில் சிரிப்பு யோகா
தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஸ்ரீ விகாசா வித்தியாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 04-07-2018, புதன்கிழமை காலை 10.00 மணிக்கு ‘சிரிப்பு யோகா’ நிகழ்வு நடத்தப் பெற்றது. இந்நிகழ்வுக்குப் பள்ளியின் தாளாளரும் முதல்வருமான இந்திரா உதயக்குமார் தலைமை வகித்தார். தேனித் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி முன்னிலை வகித்தார். பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிரிப்பானந்தா ‘சிரிப்பு யோகா’ நிகழ்வினை நடத்தி அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தார். இந்நிகழ்வில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் ம. கவிக்கருப்பையா, நிருவாகக் குழு உறுப்பினர் மு. இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு முன்னதாகத் தமிழாசிரியை எஸ். விஜயலட்சுமி வரவேற்றார். முடிவில் தமிழாசிரியை எம். மணிமலர் நன்றி கூறினார். நிகழ்ச்சியைத் தமிழாசிரியர் ஆர். பொம்முராஜ் தொகுத்து வழங்கினார்.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கத்தின் சித்திரை மாதக் கூட்டம் (21-04-2018)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் சித்திரை மாதக் கூட்டம்
தேனித் தமிழ்ச் சங்கத்தின் சித்திரை மாதக் கூட்டம் 21-04-2018, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மாயா புத்தக நிலையம் மாடியில் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், செயலாளர் சு. சி. பொன்முடி, துணைச் செயலாளர்கள் மு. பிரீத்தா நிலா, அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காந்திகிராமக் கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் சி. சிதம்பரம் ‘புத்தக வாசிப்பும் புதிய சிந்தனைகளும்’ என்ற தலைப்பிலும், தேனி, நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ம. தேவகி ‘வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் புத்தகங்கள்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். முன்னதாகத் துணைத்தலைவர் ந.வீ.வீ. இளங்கோ வரவேற்றார். முடிவில் பொருளாளர் ம. கவிக்கருப்பையா நன்றி தெரிவித்தார். (நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கத்திற்கான இணையதளம் தொடக்க விழா (18-03-2018)

தேனித் தமிழ்ச் சங்கத்திற்கான இணையதளம் தொடக்க விழா
தேனித் தமிழ்ச் சங்கத்திற்கான இணையதளம் தொடக்க விழா 18-03-2018 அன்று தேனி, பெரியகுளம் சாலையிலுள்ள சங்க அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், சங்கத்தின் செயலாளர் சு. சி. பொன்முடி முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவர் முனைவர் போ. சத8தியமூர்த்தி கலந்து கொண்டு சங்கத்திற்கான இணையதளத்தினைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பொருளாளர் ம. கவிக்கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர் ரெ.ம. தாமோதரன் (முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


தேனித் தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா (17-03-2018)

தேனித் தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா
தேனித் தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா 17-3-2018 அன்று தேனி, வாசவி திருமண மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், சங்கத்தின் செயலாளர் சு. சி. பொன்முடி, துணைத்தலைவர் ந.வீ.வீ. இளங்கோ மற்றும் துணைச்செயலாளர் அ. முகமது பாட்சா முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் சங்கத்தின் நிருவாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். தேனி மாவட்ட மூத்தத் தமிழறிஞர் பெரியகுளம், புலவர் மு. இராசரத்தினம் அவர்கள் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டார். சிரிப்பானந்தாவின் சிரிப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, சங்கத்தின் துணைச் செயலாளர் மருத்துவர் மு. பிரீத்தா நிலா வரவேற்றார். முடிவில் சங்கத்தின் பொருளாளர் ம. கவிக்கருப்பையா நன்றி கூறினார். (நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)


முதல் பொதுக்குழுக் கூட்டம் (17-12-2017)

முதல் பொதுக்குழுக் கூட்டம
தேனித் தமிழ்ச் சங்கத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம், 17-12-2018 அன்று தேனி, அல்லிநகரம் செண்பா மருத்துவமனை வளாகத்தில் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி தலைமையில், செயலாளர் சு. சி. பொன்முடி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொருளாளர் ம. கவிக்கருப்பையா, துணைத்தலைவர் ந.வீ.வீ. இளங்கோ, துணைச் செயலாளர்கள் மருத்துவர் மு. பிரீத்தா நிலா, அ. முகமது பாட்சா ஆகியோரும் நிருவாகக்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.(நிகழ்வுப் படங்களைப் பார்வையிட: இங்கே சொடுக்குக)



© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)