TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம் - நோக்கங்கள்

http://www.thenitamilsangam.org
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019

நோக்கங்கள்

1. இச்சங்கம் எந்த ஒரு அரசியல் கட்சியிலும், கட்சிப்பணிகளிலும் ஈடுபாடு கொள்ளாமல் தனித்து இயங்கக்கூடிய ஒரு சங்கமாகும்.

2. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலைகள் சார்ந்த துறைகளில் வளர்ச்சியையும், செழுமையையும் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும். மேலும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குக் குறிப்பாகத் தமிழில் எழுதப்படும் நல்ல படைப்புகளை ஊக்குவித்து அப்படைப்புகளை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க உதவும்.

3. இச்சங்கம் மூலம் நாடறிந்த நல்ல தமிழ் அறிஞர்களை அழைத்து இலக்கியங்களின் வழியிலான வாழ்வியலுக்கான மதிப்பீடுகளை அறிமுகம் செய்தல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே இலக்கியம் படித்தல் / படைத்தல் போன்ற முயற்சிகளை முறைப்படுத்திட வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளும்.

4. இச்சங்கத்தின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்கான காரணிகளை ஆராய்ந்து, அவற்றைப் பொதுமக்களிடையேப் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துதல், இணையத் தமிழ், ஊடகத் தமிழ், ஓலைச்சுவடி படித்தல், கல்வெட்டு படித்தல் போன்ற பயிற்சிகளை நடத்தி இளைஞர்களுக்குத் தமிழின் மீது ஈர்ப்பை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

5. இச்சங்கத்தின் மூலம் தமிழ் வளர்ச்சியில் படைப்புத்திறனில் மிளிரும் வகையில் மகளிருக்குத் தனிச்சிறப்புப் பயிற்சிகளை வழங்குதல், தமிழில் பிழையின்றி பேசவும், எழுதவும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்தல். மேலும், தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுமையும் உள்ள தமிழ்ச் சங்கங்களோடு தொடர்பு கொண்டு தமிழ் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுதல் போன்றவைகளை மேற்கொள்ளும்.

6. இச்சங்கத்தின் மூலம் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு வழங்கும் நிதியுதவிகளைப் பெற்றுத் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலைகளை வளர்த்திடுவதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும்.

7. இச்சங்கத்தின் மூலம் மாணவர்களுக்குத் தடையின்றி கல்வி கற்க வேண்டிய உதவிகள் செய்தல், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி அதன் மூலம் சிறந்த கல்வியினை வழங்கி வர வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளும்.


© 2018-2024 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்

இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது

முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ்

(www.muthukamalam.com)
(ISSN: 2454-1990)